அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! அதுவரை நான் விட மாட்டேன் குஷ்பு..!

முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் பதவியேற்றார். இதனை முன்னிட்டு சென்னை ஆர்கே நகரில் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பேச்சாளார் சைதை சாதிக், பாஜக சேர்ந்த நடிகைகளான குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்திரி ரகுராம் ஆகியோரை ஒருமையில் பேசினார்.

இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக சார்பிலும் பொதுமன்னிப்பு கேட்கப்பட்ட நிலையில் சைதை சாதிக்கும் நடிகை குஷ்புவிடம் போன் செய்து மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து பேசிய குஷ்பு அக்கூட்டத்திற்கு பொறுப்பேற்ற அமைச்சர் மனோதங்கராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார். பாதிகப்பட்டது நான் ஆகையால், டில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்துக்கு வரும் 4-ஆம் தேதி புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன் எனக் கூறினார்.