ஹிமாசல பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 71 பேர் உயிரிழப்பு. மேலும் மீட்புப் படையினர் சடலங்களை மீட்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உத்தரகாண்ட் மாநிலம், ஹிமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சிம்லாவின் சம்மர் ஹில், கிருஷ்ணா நகா், ஃபாக்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கடந்த மூன்று நாட்களில் நிலச்சரிவு மற்றும் கனமழை போன்றவற்றையால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காணவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இதுவரை 57 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று முதன்மைச் செயலாளர் (வருவாய்) ஓன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா நகரில் சுமார் 250 முதல் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரில் இடைவிடாது பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் மாநிலம் சந்தித்த மிக மோசமான இயற்கை பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.