காலைஉணவு திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும்! கடிதம் மூலம் கோரிக்கை வைத்த மாணவன்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இதில்,முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைகின்றனர். எனவே ஏழை குழந்தைகள் பசியாறும் இந்த திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதுமட்டுமன்றி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்து அறிவிக்க கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News