சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜேஷ் விஸ்வாஸ் என்ற நபர் உணவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தனது விடுமுறையை கழிக்க கெர்கட்டா அணை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.96,000 மதிப்பிலான SAMSUNG S 23 மொபைல் போனை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரில் தவறவிட்டுள்ளார்.
தனது போனில் முக்கிய அரசு தரவுகள் இருப்பதாகவும், அதனால் போனை எப்படியேனும் மீட்க வேண்டும் என நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் பேசியுள்ளார். 30 ஹார்ஸ்பவர் கொண்ட என்ஜின் பம்ப் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் நீரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெளியேற்றிய பின்னர் அந்த அதிகாரி தனது போனை கண்டெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து ராஜேஷ் விஸ்வாஸ் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீருக்குள் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் அவருடைய போன் இயங்கவில்லை எனத் தெரிகிறது.