தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் முதியவர் ஒருவர் குடி போதையில் இருந்துள்ளார். அப்போது அந்த முதியவர் பிரசவ வார்டுக்குள் நுழைய முயன்ற போது காவலாளிகள் அவரை வெளியேற்றியுள்ளனர்.

இதையடுத்து அந்த முதியவர் குடிபோதையில் கேட்ட இழுத்து பூட்டி தகராறில் ஈடுபட்டார். தன்னை உள்ளே விட மறுத்தால் வேறு யாரும் உள்ளே போகவும் கூடாது வெளியில் வரவும் கூடாது என காவலாளிகளை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதனால் நோயாளிகளுக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து கானா விலக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்