உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள லஸ்கர் ரயில் நிலையத்தில் கொல்கத்தா-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஏப். 28) சென்று கொண்டிருந்த போது பணி ஒருவர் திடீரென அந்த ரயிலைப் பிடிக்க ஓடியுள்ளார்.
அப்போது ரயிலைப் பிடித்த அவர் எதிர்பாராவிதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார்.
இதைக் கவனித்த ரயில்வே பெண் போலீசார் உமா, உடனடியாக ஓடிச் சென்று அந்த பயணியின் கைகளை பிடித்துக் கொண்டுள்ளார்.
மேலும், ரயிலில் ஏறிய பயணி விழுந்து விட்டதைப் பார்த்த சக பயணிகள், ரயிலின் செயினைப் பிடித்து இழத்தனர். இதனால் ரயில் நின்றது.
ரயிலில் இருந்து தவறி விழந்த பயணிக்கு காயங்கள் எதுவும் ஏற்படாமல் தப்பினர்.
ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரயிலில் பயணம் செய்த பயணி, உணவு மற்றும் பழச்சாறு வாங்க இறங்கியதாகவும், உணவு வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறும் போது தவறி விழுந்ததாக தெரிய வந்தது.
இந்த சம்பவம் ரயில் நிலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.