தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி ராஜா , அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் அமலாக்கத்துறை நடத்திவரும் சோதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக தலைமை செயலகத்தில் உள்ளே நுழைவது, அமைச்சரின் அறையை சோதனையிடுவது அத்துமீறிய நடவடிக்கை.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடலக்குறைவால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் துணை நிற்கிறது.
பாஜக அரசு, வேறு காட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க முயற்ச்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெறும் ஆட்சிக்கு நெருக்கடி தரும் நோக்கில் பாஜக இதை செய்கிறது.
தமிழ்நாடு பெரியாரின் மண் , பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த , திமுக உள்பட மதசார்பற்ற கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும்.என தெரிவித்தார்.