தூய்மை பணியாளரை கல்லால் தாக்கிய நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட கேகேநகர் பகுதியில் தூய்மை பணியாளர் திருப்பதி நகராட்சி தூய்மை வாகனத்தை எடுத்துக் கொண்டு குப்பை எடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது சாலையின் ஓரத்தில் தண்ணீர் இருந்ததால் வாகனத்தை சற்று தூரத்தில் எடுத்துச் சென்று நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிவாசி ஒருவர் திடீரென கல்லை கொண்டு தூய்மை பணியாளரின் வாயில் வளமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் திருப்பதி ரத்த காயங்களுடன் அங்கிருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு நகராட்சிக்கு வந்துள்ளார்.

நகராட்சிக்கு ரத்த காயத்துடன் வந்த ஊழியர் ஒப்பந்ததாரர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார் ஒப்பந்ததாரர் அவருக்கு முதல் உதவி அளிக்காமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சாலையின் ஓரத்தில் தண்ணீர் இருந்ததால் வாகனத்தை தள்ளி நிறுத்திய தூய்மை பணியாளரை கல்லால் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மாங்காடு காவல் நிலையத்தில் இரத்த காயத்துடன் புகார் அளிக்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மை பணியாளர் ரத்தக்காயத்துடன் இருந்த நிலையில் அவ்வழியாக கடந்து சென்ற நகர மன்ற தலைவர் கண்டும் காணாது போல் தனது காரில் சென்ற சம்பவம் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News