தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஐந்தாவது மண்டலத்திற்க்கு உட்பட்ட பாரதமாதா சாலையில் கடந்த 25ஆம் தேதி மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர்.
அப்போது அங்கு அம்மா மீன் கடையின் மேல் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர், அப்போது கடையில் வேலை செய்யும் அருண் கார்த்திக் (36), என்ற ஊழியர் மாநகராட்சி ஊழியர்களை தடுத்து நிறுத்தி தகாத வார்தைகளால் பேசியுள்ளார்.

இதை கேள்விப்பட்டு வந்த சுகாதார ஆய்வாளர் சாமுவேல் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார், அப்போது அந்த நபர் சுகாதார ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக சேலையூர் காவல் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.