அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு ரோட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு..!!

தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் நடைப்பயணத்தின் போது கொடுக்கப்பட்ட மனு சிறிது நேரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். சிறிது நேரத்தில் தான் அளித்த மனு சாலையில் வீசி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அண்ணாமலை அங்கிருந்து நகர்ந்த சில நிமிடங்களில் அந்த மனு சாலையில் கிடந்துள்ளதை அவர் பார்த்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News