Connect with us

Raj News Tamil

நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்! – வைரலாகும் வீடியோ!

உலகம்

நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்! – வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு அட்லஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

வானத்தில் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More in உலகம்

To Top