பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு சென்ற போது பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.
லாரி ஓட்டுநர் மேம்பாலத்தின் உயரத்தை தவறாகக் கணித்ததனால் விமானம் சிக்கிக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.