பேருந்து கண்ணாடியை உடைத்த குடிபோதை ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு பேருந்தை தாமதமாக எடுத்ததாகக் கூறி பேருந்து கண்ணாடியை உடைத்த குடிபோதை ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வலையப்பட்டி செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது பேருந்தின் குறுக்கே பாய்ந்த ஒரு நபர் வண்டியை தாமதமாக எடுத்து வந்ததற்காக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.


குடிபோதையில் இருந்த அந்த நபர் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸ் கொண்ட பையை ஓங்கி கண்ணாடியில் அடித்ததில் சுக்கு நூறாக உடைந்தது. இதையடுத்து அந்த நபர் தப்பியோடினார்.

பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கபப்ட்டனர் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் புகாரை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News