துப்பாக்கியால் சக காவலரை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் கைது..!

அசாம் மாநிலத்தில் உள்ள சாரெய்டியோவில் போலீஸ்கான்ஸ்டபிள் தீபக் காகதி என்பவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தனது சக காவலரான ககுல் பாசுமதரியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

காவல் நிலையத்தின் இருந்த மற்ற காவலர்கள் பாசுமதரியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறிய போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ககாதி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.