புதுச்சோி வாணரப்பேட்டை அருகே தாவரவியல் பூங்கா உள்ளது.இதில் பழமை வாய்ந்த மரங்கள் அதிகம் உள்ளதால் இதில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றனா் .
இந்நிலையில் போதிய உணவின்றி குரங்குகள் அதன் அருகாமையில் இருக்கும் ஆலய வீதி ராஜராஜன் வீதி கல்லறை வீதி , தமிழ் தாய நகா் போன்ற பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடி வந்தது.
மேலும், அதன் அருகிலுள்ள தனியாா் பள்ளிகளுக்குள் புகுந்து மாணவா்களின் உணவு பைகளுக்குள் இருக்கும் உணவை நாசம் செய்து வந்தது. இதனால் அச்சத்தில் இருந்துவந்த ஊா்மக்கள் மற்றும் மாணவா்கள் குரங்குகளை பிடிக்குமாறுவனத்துறையினரிடம் கோாிக்கை வைத்தனா்.இந்நிலையில் ,நேற்று குரங்கு மீண்டும் பள்ளிக்கு படையெடுத்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு தகவல் தொிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினா், பழத்துடன் கூண்டை வைத்து குரங்கை பிடித்தனா்.இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனா்.