இந்தியாவின் புண்ணிய நகரம் என்று போற்றபடும் வாரணாசியில் உள்ள பானரசையடுத்த கோட்வால் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காலபைரவருக்கு தனி முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது.
இந்த நகரின் அதிகாரியாகவும் அதிபதியாகவும் காலபைரவர் திகழ்வதாக நம்பபடுவதால் இத்தகையை சிறப்பு காலபைரவருக்கு அளிக்கபடுவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்
மிக பழமையான கட்டிட அமைப்பை கொண்ட கோட்வால் காவல் நிலையம் நுழைந்த உடன் வலது புறத்தில் உள்ள காவல் ஆய்வாளர் அறையில் ஆய்வாளர் இருக்கையில் கால பைரவர் படம் வைக்கப்பட்டு மேசையில் லத்தி வாக்கிடாக்கி மற்றும் குற்ற பதிவேடுகள் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் ஆய்வாளர் அதே அறையில் உள்ள மாற்று இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொள்வது தொடர்சியாக பின்பற்றபட்டு வரும் வழக்கமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் பொறுப்புக்கு வரும் காவல் பணியாளர்கள் அதிகாரிகள் கோட்வால் காவல் நிலைய ஆய்வாளரான கால பைரவரை வணங்கிய பிறகே பொறுப்பேற்று கொள்வார்களாம்.