காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரி மற்றும் காய்கறி கடைகள் என ஏராளமான கடைகள் செயல்படுகிறது.
இதில் பெரும்பாலான கடைகள் சுங்குவார்சத்திரம் திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு மாதம்தோறும் மாமுல் அளித்து வந்துள்ளனர்.

இதனிடையே மொளச்சூர் முருகன் கோவில் அருகில் உள்ள பேக்கரி,காய்கறி கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு மாமுல் தர மறுத்து நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனர்.
இதனை அறிந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் மாமுல் தர மறுத்த இரண்டு கடைகளிலும் அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததோடு சிசிடிவி காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடை உரிமையாளர்களிடையே அராஜக போக்குடன் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பரந்தாமன் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே மாமுல் தர மறுத்த இரண்டு கடைகளிலும் அடித்து நொறுக்கும் காவல் ஆய்வாளர்..! pic.twitter.com/sRJgCW5n7y
— Raj News Tamil (@rajnewstamil) February 15, 2023