நம் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் NIIMS பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனுராக் தாக்கூர் பேசியதாவது:
ஸ்டார்ட் அப்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் இந்தியா உலகின் பிரகாசமான நாடாக உள்ளது. நம் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது.
2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது, பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான மற்றும் வளர்ந்த பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது இளம் ரத்தம்தான்.
இந்தியா மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் சமீபத்திய வெற்றி, விண்வெளித் துறையில் இளைஞர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.