சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5870 க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.