அரசு வெளியிட்ட அறிக்கையில்;
ஆவின் நிறுவனம் சுமார் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. மேலும் நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் பாலை நுகவோருக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் மாட்டின் தீவனம், புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பாலின் விலையை உயர்த்தி வழங்கிட உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பாலின் விலை ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் விற்கப்படும் என்றும், இதனால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.