தொடர்ந்து சரிந்து வரும் தக்காளியின் விலை…பொது மக்கள் மகிழ்ச்சி

தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் கடந்த மாதம் (ஜூலை) ஆரம்பத்தில் இருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை சென்றது. இதனால் தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த 2-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை அதற்கு மறுநாளில் கிலோவுக்கு ரூ.10 குறைந்தது, அதற்கு அடுத்த நாளில் இருந்து கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்து கொண்டே வந்தது.

கடந்த 6 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இனி வரக்கூடிய நாட்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News