Connect with us

Raj News Tamil

சென்னையில் தக்காளியின் விலை குறைவு!

தமிழகம்

சென்னையில் தக்காளியின் விலை குறைவு!

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியின் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.210 வரை சிறிய கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளுக்கு 20 முதல் 30 லாரிகள் மட்டுமே வந்தது இதனால் தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக வரத்து அதிகரித்து வியாழக்கிழமை 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக வந்தது.

More in தமிழகம்

To Top