தரைக்கு வந்த தக்காளி விலை ! குஷியில் இல்லத்தரசிகள்!

கடந்த பல நாட்களாக விலையுயர்ந்த தக்காளி விலை நேற்று கர்நாடகாவில் விலை குறைந்து தரைக்கு வந்தது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வடமாநிலங்களில் பெய்து வந்த தொடர் மழையினால் வெளிமாநிலங்களில் இருந்து வந்த தக்காளி வரத்து குறைந்து போனதையடுத்து தக்காளி விலை எப்பொழுதும் இல்லாத நிலையில் மொத்த சந்தைகளிலும், சில்லறை விற்பனையகங்களிலும் உயர்ந்து காணப்பட்டது.ஒரு நேரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200ஐ தொட்டது,பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர் வரத்து அதிகரிக்க துவங்கியதும் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கினாலும் ஒரு கிலோ தக்காளியின் விலை நூறு ரூபாய்க்கு மேலே விற்பனையாகி இல்லத்தரசிகளைத் தொடர்ந்து பயமுறுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது. தக்காளி வரத்து 3 மடங்கு அதிகரித்ததால் விலையும் 5ல் ஒரு பங்காக குறைந்தது. இது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News