நடிகர் தனுஷ்-யை விடாமல் துரத்தும் பிரச்சனை..! அய்யோ பாவம்..!

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் ஹூட்டிங், தற்போது தென்காசி அருகே காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள படக்குழுவினர், ஹூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த ரசிகர்கள் தான் அந்த வீடீயோவை எடுத்துள்ளதாக புகார் த்ரிவித்துள்ளனர். மேலும் தயவு செய்து யாரும் லீக்கான வீடியோவை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து பேசிய அவர்கள், படக்குழுவை சேர்ந்தவர்கள் யாராவது வீடியோ எடுத்திருந்தால் கண்டித்திருக்கலாம், ஆனால் ரசிகர்களே இவ்வாறு செய்திருப்பதால், தனுஷ் தான் கண்டிக்க வேண்டும் என்ற சலசலப்பு பேச்சுக்கள் படக்குழுவில் கிளம்பியிருகிறதாம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் ஹூட்டிங் துவங்கியது முதலே புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.