காதலியை அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சைக்கோ காதலன்..!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.

போதைக்கு அடிமையான அணுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அணுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.

நேற்று காலை போதையில் இருந்த அணுதீப் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தி இருக்கிறார். அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்துள்ளார்.

ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். தற்போது அந்த மாணவி ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் அணுதீப்பை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News