பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 1,000 களைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பாக எல். இ.டி திரைகள் அமைக்கப்பட்டது.
தற்போது எல். இ.டி திரைகள் கோளாறானால் ஜல்லிக்கட்டு பார்க்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.