தமிழ் வளர்ச்சித்துறையின் போட்டி.. தேர்வாகிய மாணவர்களுக்கு பரிசு..

அறந்தாங்கி அருகே, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடக்க உள்ள போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கு தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கு தேர்வாகியுள்ள 5 மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தகத்தையும், கேடயத்தையும், அவர் பரிசாக வழங்கினார்.

RELATED ARTICLES

Recent News