Connect with us

Raj News Tamil

வெளியானது மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி !

சினிமா

வெளியானது மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி !

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’ மற்றும் பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கிவருகிறாா் .

இப்படத்தில் மோகன் லால் கதாநாயகநாகவும் மேலும், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் பலா் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து
வரும் படக்குழு , தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்போஸ்டரானது ,மோகன்லால் ரசிகா்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top