பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையை மேற்கொண்டு வந்தார்.
பாத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் வலது கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கீழே நின்று கொண்டு இருந்த தொண்டரிடம் பேண்டைடு தருமாறு கேட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முருகானந்தம் அண்ணாமலையின் வலது கையின் விரல் பகுதியில் போடுவதற்கு பதிலாக இடது கையின் விரல் பகுதியில் பேண்டைடை ஒட்டினார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.