சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்று வீசியது. மழைபெய்யும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்தது.

இந்நிலையில் பலத்த காற்று காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.
அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து செங்குன்றம் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.