இதே அமலாக்கத்துறை ஒரு நாள் மோடி மீதும் பாயும் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச சொன்னால் பிரதமர் மோடி வெளியில் பேசியது ஜனநாயகப் படுகொலை.

மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது பிரதமர் மோடி சுற்றுலா சென்று மற்ற நாட்டுத் தலைவர்களை பார்க்கிறார். பிரதமர் மனித சமுதாயத்தை சேர்ந்தவரா எனத் தெரியவில்லை.மணிப்பூர் கலவரம் இப்போது தான் பிரதமருக்குத் தெரிகிறதா? உளவுத்துறை என்ன செய்கிறது?

நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதை விளம்பரம் செய்வது போல, இதையும் விளம்பரம் செய்யலாம்.

மோடி மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இதே அமலாக்கத்துறை ஒரு நாள் மோடி மீதும் பாயும் என்றார்.

RELATED ARTICLES

Recent News