அதிரடி முடிவு எடுத்த சர்தார்படக்குழுவினர்..!

தீபாவளி விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்தார். பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் பிஎஸ்.மித்ரன், நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர், சர்தார் படத்தின் 2-வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

விரைவில் 2-வது பாகத்தின் படப்பிடிப்பின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இச்செய்தி கார்த்தியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது.