Connect with us

Raj News Tamil

ஜிவி சொன்ன ரகசியம்! – மகிழ்ச்சியில் வாடிவாசல் ரசிகர்கள்!

சினிமா

ஜிவி சொன்ன ரகசியம்! – மகிழ்ச்சியில் வாடிவாசல் ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், விடுதலை 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு, வாடிவாசல் படத்தை இயக்க போவதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் “வாடிவாசல் படத்திற்கான இசை தயார் நிலையில் உள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் தற்போதைய படபடப்பிடிப்புகள் முடிந்ததும் வாடிவாசல் ஆரம்பமாகும். உங்களைப்போல் நானும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வாடிவாசலுக்கான இசை தயாராக உள்ளது என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More in சினிமா

To Top