தமிழகம்
விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ராணுவவீரா் கொலை! வீட்டில் துாங்கியபோது நோ்ந்த விபரீதம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன் (24). கடந்த 2018ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து வேல்முருகன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் , நேற்று இரவு வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் மேலே சென்று பார்த்தபோது,அவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த போலீஸார் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக வேல்முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை விரைந்து பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
