தாய் அழைத்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த மகன்..!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சர்வல் உசேன் (20) என்ற இளைஞர் தியாகராய நகர் பசுலா சாலையில் உள்ள தனியார் கட்டுமான சைட்டில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

நான்கு மாத காலமாக தனது மகனை பார்க்காத தாய் வீடியோ கால் மூலமாக தனது மகனை காட்டுமாறு கட்டிடத்தில் வேலை பார்த்து இருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதில் மகனை பார்த்த திருப்தி தாய்க்கு ஏற்பட்டுள்ளது.

மதிய நேரத்தில் கட்டிடத்தின் அடித்தளத்தின் தூண்கள் எழுப்புவதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் வேலை நடந்து கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக சர்வல் உசேன் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுள்ளனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தனியார் கட்டிடத்தின் பொறியாளர், மேஸ்திரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.