மாமியார் வீட்டில் திருடிய, மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த ரெஜினா என்பவர் பெங்களூரு வசித்து வருகிறார். இவரது மகளை பிரதீப்குமார், என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 30ம் தேதி, ரெஜினா சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் ரெஜினா வீட்டின் அருகே, பிரதீப்குமார் சுற்றினார். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது, ரெஜினாவின் மருமகன் என்று கூறினார். ஆனாலும் அவரை நம்பாத சிலர், ரெஜினாவுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தனர். அவர் எடுக்கவில்லை. பின்னர் பிரதீப்குமார் அங்கிருந்து சென்றார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, ரெஜினா வீட்டிற்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, தங்கநகைகள் உட்பட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது. அக்கம் பக்கத்தினரிடம் திருட்டு பற்றி கூறினார். அப்போது சிலர் பிரதீப்குமார் புகைப்படத்தை காண்பித்தனர். இதனால் அவரே திருடியது தெரிந்தது.
ரெஜினா அளித்த புகாரில், ஹலசூரு போலீசார் பிரதீப்குமாரை கைதுசெய்தனர்.