கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் 65 வயது பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தனது இளைய மகன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது மகனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும் முன் குற்றவாளி ஏழரை மாதங்கள் சிறையில் இருந்தார். சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்தது.
போதைக்கு அடிமையான இளையமகன் 7 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர். இருந்தும் அவர் போதையில் இருந்து விடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.