ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’, அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி-2’ மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரகு தாத்தா’ உள்ளிட்ட 3 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ‘டிமான்டி காலனி 2’ தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியோகமாக அதன் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது.
அங்கு படம் பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் ‘கோஸ்ட்’ (GHOST) வேடம் அணிந்தும், அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர்.