தாலிபான்களின் வினோத தடை ! இனிமேல் புதிய விதிமுறைகளா ?

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.இதில் முக்கிய தடையாக உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர்.மேலும் பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தாலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து தாலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, ‘பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. எனவே
பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புதிய விதிமுறைகள் தயாராகி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News