உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.
இந்நிலையில், அயோத்தி கோவில் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.