திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் கமலா -சின்னச்சாமி தம்பதியினரின் மகள் லட்சுமி பிரியதர்ஷினி இவர் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவரது வீட்டில் புஷி என்ற பூனையை 1 1/2 ஆண்டு காலமாக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த பூனையானது தற்பொழுது கருவுற்று உள்ள நிலையில் இந்த பூனைக்கு வளைகாப்பு நடத்தப்பட வேண்டும் என லட்சுமி பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார். பின்பு தனது பெற்றோர்கள் சகோதரிகள் உற்றார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து செல்லப் பிராணியான பூனை புஷிக்கு வளைகாப்பு விழாவானது நடைபெற்றது.
இந்த வளைகாப்பு விழாவில் ஒரு பெண் தாயுற்று வளைகாப்பு விழா நடத்தப்படுவது போல் ஒற்றை வரிசையில் சீர்வரிசைகள் செய்து பூனைக்கு புது ஆடை அணிந்து, வளையல் அணிவித்து, சந்தன குங்குமம் நெற்றியிலிட்டு, பூ தூவி செல்ல பிராணியான பூனைக்குட்டிக்கு சாக்லேட் போன்ற உணவுகள் கொடுத்து வெகு விமர்சையாக தடல் புடலாக நடைபெற்ற வளைகாப்பு விழாவில் உற்றார், உறவினர்கள் வளைகாப்பு செய்து வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.