தூக்கத்தை கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த கதி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆண்டு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தீவிரமாக படித்து வந்துள்ளார். படிக்கும் போது அவருக்கு தூக்கம் வந்ததால் அதனை கட்டுப்படுத்த தூக்கத்தை கட்டுப்படுத்தும் மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மாத்திரை உட்கொண்டதால், ஒருநாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிக்கு நரம்பு வீக்கம் ஏற்பட்டு, ரத்தம் உறையாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்த மருத்துவர்கள் மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தூக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மாணவியின் இச்செயல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு முடிந்துள்ளது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News