சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் சாதனை!


தேனி மாவட்டத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணிவிகள் சாதனை படைத்துள்ளனர்.


தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, கோவை, சென்னை, தர்மபுரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 173 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், காலை 10மணி முதல் மாலை 3மணி வரை சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

மேலும் ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்த 8வயது ஹரிஸ் என்ற மாணவன் 50 நிமிடங்களில் ஆயிரம் முறை தோப்புகரணம் போட்டு கொண்டே தனிதிறன் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.