மத்திய அரசிடம் ரூ.5000 கோடி கேட்கும் தமிழக அரசு!

இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மொத்த அமைச்சரவையும், நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினருடன் தீவிரமாக மீட்புப்பணிகள் நடந்துவருவதாகக் கூறியுள்ளார்.

அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பெரிய உள்கட்டமைப்பு பாதிப்புகளை சரிசெய்ய காலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியுள்ளதாகக் கூறினார். மத்திய அரசு தமிழ்நாட்டின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஆரம்ப கால நிவாரணத் தொகையாக ரூ. 5000 கோடியை உடனே மாநிலத்திற்கு வழங்கி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News