இணையத்தில் ட்ரெண்டாகும் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று தமிழ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News