கையெழுத்து சரியில்லை என 6 வயது மாணவனை தாக்கிய ஆசிரியை

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் லுலாநகரில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தொடக்கக்கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.

இந்த வகுப்பில் பயின்றுவரும் 6 வயது மாணவன் கையெழுத்து மோசமாக இருக்கிறது என்று அந்த ஆசிரியை 6 வயதான அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் என்றும் மிரட்டியுள்ளார். அந்த மாணவன் தனது தந்தையிடம் நடந்ததை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.