தமிழ் ரசிகர்களையே அசர வைத்த தெலுங்கு ரசிகர்..!

கோலிவுட்டில் இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ப்ரதீப் ரங்கநாதன்.
இவரது இயக்கத்தில் நடித்து, கடந்த 4-ஆம் தேதி வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அப்போது லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு வெளியேறிய தெலுங்கு ரசிகர் ஒருவர், வார்த்தையால் ப்ரதீப் ரங்கநாதனை புகழ்ந்து தள்ளுகிறார். பின்னர் உணர்ச்சிவசப்பட்டு இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் செம வைரலாகிய நிலையில், தமிழ் ரசிகர்களையே மிஞ்சிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.