Connect with us

Raj News Tamil

ஸ்டார் லைட்டுகளை வேட்டியின் மூலம் திருடும் சாமத்திய திருடன்..!சிக்கிய CCTV காட்சி..!

தமிழகம்

ஸ்டார் லைட்டுகளை வேட்டியின் மூலம் திருடும் சாமத்திய திருடன்..!சிக்கிய CCTV காட்சி..!

சிவகாசியில் ஸ்டார் லைட்டுகளை திருடி வேட்டியில் எடுத்து செல்லும் திருடன் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தீபாவளி பண்டிகை, கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிவகாசியில் வீடுகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கண்ணைக் கவரும் வண்ண வண்ண கலரில் ஒளிரும் ஸ்டார்கள், எல்இடி மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில், சமீப காலமாக இந்த ஸ்டார்கள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் திருடு போய் கொண்டிருந்தன. இது பெரிய அளவில் விலை இல்லை என்பதால் யாரும் புகார் கொடுப்பதும் இல்லை.

ஆனால், சிவகாசி புது ரோடு மெயின் பஜாரில் ஒரு வீட்டில் வாசலில் மின் ஒளியில் எரியக்கூடிய ஸ்டாரை மர்ம நபர் ஒருவர் திருடி தனது வேட்டியில் மடித்துக்கொண்டு செல்லும் வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் கூறும்போது, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்து வருகின்றோம். அதில் இருக்கும் திருடன் சைக்கிள், பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவன் என்பது தெரிய வந்துள்ளது என்றும் திருடனை தேடி வருகின்றோம் என்றும் தொிவித்துள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top