லாப் டாப்பை திருடிவிட்டு, உரிமையாளருக்கு இ-மெயிலில் மன்னிப்பு கேட்ட திருடன்..!

பொதுவாக திருடர்கள் என்றாலே மனசாட்சி, இரக்கம் இல்லாதவர்கள், என அனைவரும் நினைப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் இரக்கமுள்ள திருடன் ஒருவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளான்.

அதாவது zweli thixo என்ற டிவிட்டர் பயனாளர் தனக்கு வந்த இமெயிலை ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடய லேப்டாப்பை திருடியதிற்கு மன்னிப்பு கேட்டுள்ள திருடன், எனக்கு மாத இறுதியை சமாளிக்க வேண்டிய காரணத்தால், நான் உங்கள் லேப் டாப்பை இரவு திருடினேன். அப்போது உங்களின் ஆராய்ச்சிக்கு தேவையான விவரங்கள் இருந்தது, அதை நான் மட்டும் அனுப்புகிறேன், வேறு ஏதாவது வேண்டுமென்றாலும் கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த இணையதளவாசிகள் திருடன் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு, ஆராய்ச்சிக்கான லேப்டாப்பை வாங்கிக் கொள்ளுங்கள் என பதிவிட்டுவருகின்றர்.