தொடங்கியது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: வாக்களித்தார் பிரதமர் மோடி!

மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கியது.

குஜராத் 25, கர்நாடகா 14, அசாம் 4, பீகார் 5, சத்தீஸ்கர் 7, மத்திய பிரதேசம் 9, கோவா 2, மகாராஷ்டிரா 11, உத்திர பிரதேசம் 10, மேற்கு வங்கம் 4, தாத்ரா- நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு (இன்று மே.7) காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

மேலும், வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்டு அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவும் வாக்கு செலுத்தினார்.

RELATED ARTICLES

Recent News